வாரணம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வெளியிடும், சக மதிப்பாய்வு செய்யப்பட்ட, பன்னாட்டு ஆய்விதழாகும். சமயம் அல்லது சமய ஆய்வுகள் என்பது சமயத்தை விவரித்து, ஒப்பிட்டு, விளக்கி, புரிந்து கொள்ளும் ஒரு கல்வித் துறையாகும். இது சமயதத்தை அறிவியல் ரீதியாக அணுகுகிறது. பல பண்பாட்டு, வரலாற்று அடிப்படையிலான மற்றும் அனுபவ அடிப்படையிலான கோணங்களை முக்கியமாகக் கொண்டு ஆய்வு செய்கிறது. அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்டப் பல்கலைக்கழகங்களில் உள்ள சமயம் சார்ந்த கல்விப் பாடப்பிரிவுகளில் அடங்கும் சைவம், வைணவம், சமணம், பெளத்தம், கிறித்துவம், இஸ்லாமியம் மற்றும் பிற சமயங்கள் சார்ந்த ஆய்வுகளே முன் மொழிய வேண்டும். பல்கலைக்கழகங்களில் உள்ள சமயம் சார்ந்த பாடப்பிரிவுகளில் உள்ள ஆய்வுநெறிகளைப் பின்பற்றியே ஆய்வுக்கட்டுரைகள் அமைய வேண்டும்.
சமயம் நீண்ட நெடிய ஆய்வுக்களத்தில் உள்ள இன்றையப் புதிய பார்வை மற்றும் மீளாய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆய்வுத்தளமாக விளங்குகிறது. ஆய்வுநெறிகளின் வழிகாட்டுதல்களோடு உலகின் பரந்துப்பட்ட ஆய்வுப்பாதையை வகுக்கும் புதிய ஆய்வுக் களமாகவும் விளங்குகிறது. சமயத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறது. ஆய்வு செய்துகொண்டிருக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோரின் ஆய்வுக்கான ஆதரவை மேம்படுத்தி கல்விக்கான ஆய்வுகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாரணம் பன்னாட்டுச் சமய ஆய்விதழ் ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்தடுத்த ஆய்வுத் திட்டங்கள் மற்றும் வெளியீடு மூலம் ஆய்வாளர்களுக்கு ஊக்கத்தை நல்குகிறது. உலகமயமாக்கப்பட்ட ஒன்றிணைப்பில் ஆய்வுப் பணிகளைச் செய்வது, வெளியீடுகளின் தரம் மூலம் ஆய்வில் அறிவார்ந்த கல்வியை இளைய தலைமுறையினருக்கு கொடுக்க உதவுகிறது. எங்களது இணையத்தில் கல்வி சார்ந்த ஆய்வின் பார்வைகளை விரித்தும், ஆய்வுகளை திறந்த அணுகல் தன்மையையும் கொண்டு விளங்குகிறது. இவை அனைத்தும் சிறந்த ஆய்வாளர்களின் ஆய்வுகளையும் ஆய்வுக்களங்களையும் உலகின் அனைத்து மக்களுக்கும் இலவசமாகக் கொண்டு சேர்க்கும் என்பது திண்ணம்.
Varanam is a peer-reviewed, international journal that publishes significant contributions. Religion is an ancient belief in our culture. Religion or religious studies is an academic discipline that describes, compares, explains, and understands religion. It approaches religion scientifically. It studies it from multiple cultural, historical, and empirical perspectives. Religious studies courses in government- recognized universities should include courses on Saivism, Vaishnavism, Jainism, Buddhism, Christianity, Islam, and other religions. Research papers should follow the research guidelines in religious studies in universities.
Religion is a research platform that emphasizes today's new perspectives and reviews in a long-standing field of study. It is also a new research platform that paves the way for a wide range of research in the world with the guidelines of research methods. It aims to document and preserve all aspects of religion in a way that reveals it. It aims to enhance the research support of professors and researchers who are conducting research and to promote research for education.
Vaaranam International Journal of Religion emphasizes research and encourages researchers through subsequent research projects and publications. Conducting research work in a globalized environment helps to provide intellectual education in research to the younger generation through the quality of publications. Our website broadens the horizons of academic research and makes research open access. All this will surely bring the research and research fields of the best researchers to all the people of the world for free.
சமயங்கள் தோற்றமும் வளர்ச்சியும், பக்தி இலக்கியங்கள், சமயங்களில் மாற்றங்கள், புராணங்கள், கலைகள், பண்பாடுகள், பாரம்பரிய சமய சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், கோயில் கட்டடக்கலைகள், கோயில் சிற்பங்கள், கோயில் கல்வெட்டுகள், சமய ஓலைச்சுவடிகள், தலப்புராணங்கள், தலமரங்கள், கோயிலில் நடைபெறும் பூசைகள், கோயில் ஆகமங்கள், கோயில் இசைப்பாடல்கள், கோயில் நடனங்கள், கோயில் வழிபாடுகள், கோயில் ஓவியங்கள், கோயில் திருவிழாக்கள், கோயில் பணியாளர்கள் (அர்ச்சகர், ஓதுவார், தேவரடியார்…), நாட்டார் தெய்வங்கள், கிராமத் திருவிழாக்கள், கிராமிய சமயம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், பழங்குடிமக்களின் தெய்வங்கள், பழங்குடி வழிபாடுகளும் நம்பிக்கைகளும், பழங்குடி கோயில் திருவிழாக்கள், இயற்கை வழிபாடுகள், சித்தர் இலக்கியங்கள், கோயில் வரலாறு, சமய வரலாறு, சமயம் சார்ந்த தொல்லியல் தரவுகள், சோதிடம், சமயக்கோட்பாடுகள், சமயத் தத்துவம், யோகா, ஆன்மீகச்சுற்றுலா மற்றும் கிறித்துவ இலக்கியங்கள், இஸ்லாமிய இலக்கியங்கள், சமண இலக்கியங்கள், மற்றும் பெளத்த இலக்கியங்கள் போன்ற சமயம் சார்ந்த ஆய்வுக்களங்களில் ஆய்வுகள் அமையலாம்.
Origin and development of religions, devotional literature, changes in religions, myths, arts, cultures, traditional religious rituals, beliefs, customs, Temple architecture, Temple sculptures, Temple inscriptions, Religious manuscripts, Temple legends, Temple trees, Temple rituals, Temple agamas, Temple songs, Temple dances, Temple worship, Temple paintings, Temple festivals, Temple staff (priests, orators, devas…), Tolk deities, village festivals, beliefs and customs related to rural religions, Tribal deities, Tribal worships and beliefs, Tribal temple festivals, Nature worship, siththar literature, Temple history, Religious history, Archaeological data related to religion, Astrology, Religious theories, Religious philosophy, Yoga, Spiritual Tourism and Christian literature, Islamic literature, Jain literature, and Buddhist literature. Research may be conducted in religious fields.
ஆசிரியர்கள் ஆய்வுக்கட்டுரையின் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும், அவை மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஆய்வுக்கட்டுரை வெளியிடப்படுவதற்கு முன்பு சக மதிப்பாய்வு மற்றும் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டப் பின்பே வெளியிடப்படும்.
Authors are required to submit proposals, which are reviewed and selected by the editorial board. Once so selected, the book chapters will be published after undergoing peer review and revision before publication among others.
ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் துறை சார்ந்த வளர்ச்சிக்கு பங்களிக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறோம். குறிப்பிட்ட தலைப்புகளில் வாசகர்களுக்கு பல்வேறு கண்ணோட்டங்களையும் வழங்க வாய்ப்பாக அமையும்.
Through Research Articles we provide a platform for scholars to share their research and contribute to the development of their field. It also provides an opportunity to provide readers with different perspectives on specific topics.
இதழில் ஆய்வுக்கட்டுரை வெளியிட அல்லது கட்டுரையை சில மாற்றங்கள் செய்ய ஏதேனும் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் இருந்தால் சக மதிப்பாய்வாளர்கள் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். மூன்றாவது மதிப்பாய்வாளரும் பணியமர்த்தப்பட்டால், அவருடைய முடிவே இறுதியானது. மதிப்பு ஆசிரியர் அவர்களின் முடிவு மற்றும் கட்டுரையில் வெளியிடப்பட வேண்டிய சரியான மாற்றங்களுடன் ஆசிரியரிடம் பரிந்துரைப்பர். வெளியீடு மற்றும் வெளியீட்டிற்கான மின்-சான்றிதழின் பி.டி.எப் (PDF) வழங்கப்படும். நீண்ட காலப் பாதுகாப்புச் சேவைக்காக இணையக் காப்பகத்தில் (Internet Archive) டெபாசிட் செய்வதற்கான நிலையான காப்பகக் கொள்கையை எங்கள் இதழ் ஏற்றுக்கொள்கிறது.
வெளியிடப்படும் கட்டுரைகளைத் தீர்மானிக்கும் பொறுப்பு மதிப்பீடு ஆசிரியர்களுக்கு உண்டு. ஆசிரியர் குழுவின் வழிகாட்டிக் கொள்கைகளால் முதன்மை ஆசிரியர் வழிநடத்தப்படுகிறார். கையெழுத்துப் பிரதியில் உள்ள அவதூறு, பதிப்புரிமை மீறல் மற்றும் கருத்துதிருட்டு தொடர்பான சட்டத் தேவைகளைப் பின்பற்றாத எந்தவொரு ஆய்வையும் பொறுப்பு ஆசிரியர் புறக்கணிக்க முடியும். கட்டுரைகள் எந்த வகையான வணிக தாக்கமும் இல்லாமல் கல்வித் தகுதிக்காக மட்டுமே மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
Peer reviewers advise the authors if they have any constructive suggestions for publishing the article in the journal or to make some changes in the article. If a third reviewer is appointed, his decision will be final. The evaluator will recommend to the author with their conclusion and appropriate changes to be published in the article. PDF of e-certificate will be provided for issue and issuance. Our journal adopts standard archiving policy of web archiving for long-term preservation service.
Reviewing authors are responsible for deciding which articles to publish. The principal teacher is guided by the guiding principles of teachers. The editor can ignore any review that does not follow the legal requirements regarding defamation, copyright infringement and plagiarism in the manuscript. Essays should be evaluated for academic merit only without any commercial impact.
ஆங்கிலத்திற்கு Plagiarism X மற்றும் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு Plagiarisma மூலம் சமர்ப்பித்த அனைத்து கட்டுரைகளின் உண்மைத் தன்மை மற்றும் ஒற்றுமையை கட்டுரை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். கருத்துத் திருட்டு உள்ள கையெழுத்துப் கட்டுரைகள் கருத்துத் திருட்டுத் தடைகளுக்கு உட்படும்.
Authors must check the authenticity and consistency of all articles submitted through Plagiarism X for English and Plagiarisma for articles written in Tamil. Plagiarized manuscripts are subject to plagiarism sanctions.
தவறாக வழிநடத்தும் மற்றும் தவறான தரவு, கருத்துகள், அறிக்கைகள் மற்றும் கருத்துத் திருட்டு சிக்கல்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட கட்டுரை, கட்டுரை ஆசிரியரின் முழுப் பொறுப்பாகும். அத்தகைய விளைவுகளின் கீழ் ஆசிரியர் குழு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. எந்தவொரு சட்டச் சிக்கல்கள் மற்றும் வெளியீட்டு நெறிமுறைகளில் குறைபாடுகளுக்கு கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாவர். கட்டுரையாளரிடம் உரிம மாற்று படிவம் பெற்று காப்புரிமையைச் இதழேப் பெற்றுக் கொள்ளும். படைப்பாளர்கள் அதை தவறான நோக்கத்தில் தவறான பாதையில் பயன்படுத்திச் சிக்கல்களை உருவாக்கிக் கொண்டால், அதற்கு இதழின் பதிப்பாசிரியர் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார்.
Any misleading and incorrect data, comments, statements and plagiarism issues are the sole responsibility of the concerned article author. The editorial board does not accept any responsibility under such consequences. Article authors are solely responsible for any legal issues and lapses in publication ethics. The journal will acquire the copyright by obtaining a license transfer form from the author. The editor of the Journal will not be held responsible if the creators use it in a wrong way and create problems.